வாழ்க இன ஒற்றுமை! வளர்க ஜங்கம் மலர்!!
ஜங்கம் மலர் நாட்டிலேயே நமது இனத்திற்காக வெளிவரும் ஒரே மாத பத்திரிக்கை மட்டுமல்லாது ஒரு மதிப்பிற்குரிய ஆவணமாக கருதப்படுகிறது.
இம்மலரில் சமூகநீதி சம்பந்தமான செய்திகள், மணமாலை விளம்பரங்கள், ஜங்கம் இனம் சம்பந்தமான வரலாறு, சங்கப் பணிகள், சமுதாய மக்களின் சேவை விழாக்கள், சாதனைகள், ஆன்மீக செய்திகள், வர்த்தக விளம்பரம், நாட்டு நடப்புகளை நம் இன மக்கள் அனைவரும் அறிவதற்காக எளிய வழிமுறையில் புத்தகம் வெளியிடப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தங்களது ஊர்களில் நடைபெறும் நம் இனம் சம்பந்தமான விழாக்கள், நிகழ்ச்சிகள்,சாதனைகள் முதலான நிகழ்வுகளை ஜங்கமலர் ஆசிரியருக்கு அனுப்பினால் அவைகளை புத்தகத்தில் வெளியிடுவதின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
முகவரி: ஆசிரியர், ஜங்கம் மலர், ஏபி 1609, 103வது தெரு, 14வது செக்டார், கே.கே.நகர், சென்னை & 600078. கைபேசி: 9940426831
நமது ஜங்கம் மலர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் உள்ள சந்தாதாரர்கள் இல்லங்களுக்கு பிரதி மாதமும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஜங்கம் இன உறவினர் அனைவரின் கையிலும், இல்லத்திலும் ஜங்கம் மலர் தவழ வேண்டும் என சங்கம் விரும்புகிறது. புத்தகம் படிப்பது என்பது சிறந்த பழக்கமாகும். நாம் நமது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில், நமது ஜங்கம் மலரைப் பரிசாக வழங்கினால், அதாவது ஆயுள் சந்தா ரூ.5000 அல்லது ஐந்தாண்டு சந்தா ரூ.1000 செலுத்தி, மணமக்களின் முகவரிக்கு ரசீது போட்டு வழங்கினால், ஆயுள் முழுக்க அல்லது குறைந்தது 5 வருடத்திற்கு அவர்களது இல்லங்களில் ஜங்கம் மலர் தவழும். இதன் மூலம், நம் இனம் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் அவர்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக இருக்கும்.
தங்களையும் தங்கள் உறவினர்களையும் ஜங்கமலர் சந்தாதாரராக ஆகும்படி அன்புடன் அழைக்கின்றோம். தொடர்ந்து தொய்வின்றி மாதந்தோறும் பத்திரிக்கை வெளியிடுவதற்கு உங்களது மேலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
ஜங்கம் மலரில் வர்த்தக விளம்பரம், வரி விளம்பரம் மணமாலை விளம்பரங்கள் வரவேற்கப்படுகிறது. ஐந்தாண்டு சந்தா நிறைவு பெற்றவர்கள் தயவுசெய்து மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜங்கம் மலருக்கான சந்தா விவரம்
ஐந்தாண்டு சந்தா ரூ.1000/-
ஆயுள் சந்தா ரூ.5000/-
சங்கம் மற்றும் ஜங்கம் மலரின் வளர்ச்சிக்கான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி கட்டணத்தை நேரிலோ அல்லது வங்கியின் மூலமாகவோ செலுத்தலாம் வங்கியின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
All India Jangam Welfare Association
Indian Overseas Bank,
Branch : Ashok Nagar, Chennai-83.
A/c No : 046301000039842
IFSC Code : IOBA0000463
- பி. சுந்தரமூர்த்தி, பொருளாளர்